மனைவியுடன் படுக்கையில் 60 வயது முதியவர் உல்லாசம்... வெறியாட்டம் ஆடிய கணவன்
கரூர் அருகே, திருமணமான பெண்ணுடன் தகாத உறவில் இருந்த முதியவரை, பெண்ணின் கணவர் கத்தியால் வெட்டி கொலை செய்திருக்கிறார்.
கரூர் மாவட்டம் விஸ்வநாதபுரியை சேர்ந்தவர் காசிநாதன். 60 வயது முதியவரான இவர், திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த அப்பெண்ணின் கணவர் முதியவரை கண்டித்திருக்கிறார். இதனையும் மீறி முதியவர் தகாத உறவில் இருந்து வந்ததால் ஆத்திரமடைந்த அவர், தன் நண்பர்களுடன் சேர்ந்து முதியவரை கத்தியால் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், பெண்ணின் கணவரை கைது செய்த நிலையில், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.