ஈரோட்டில் பொது வழித்தடத்தில் நடந்து செல்லக்கூடாது என கூறி இளைஞர் ஒருவர் அரிவாளை காண்பித்து பெண்களை அச்சுறுத்தும் வீடியோ காட்சி இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சுண்டக்காம்பாளையத்தை சேர்ந்த பிரபு என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த தனபால் என்பருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் தனபால் தனது வீட்டின் முன்பாக உள்ள பொது வழியில் பிரபுவின் குடும்பத்தினரை மிரட்டும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வரும் நிலையில், இளைஞர் மீது உரிய நடவடிக்கை எடுக்கோரி அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.