எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்க பணி முறைகேடு விவகாரம்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Update: 2024-02-23 04:24 GMT

எண்ணூர் அனல் மின் நிலையத்தில் 660 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட கூடுதல் அலகை அமைக்க டான்ஜெட்கோ ஒப்பந்தம் கோரியது. இந்த ஒப்பந்தம் பிஜிஆர் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக கூறி வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின் போது பிஜிஆர் எனர்ஜி நிறுவனம் பினாமி நிறுவனம் அல்ல என அரசு தரப்பில் பதிலளித்த நிலையில், கடந்த ஆட்சியில் ரத்து செய்யப்பட்ட ஒப்பந்தம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டதற்கான காரணம் என்ன என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதனையடுத்து, மனுவுக்கு தமிழக அரசு, டான்ஜெட்கோ பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், ஏப்ரல் 10-ம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்

Tags:    

மேலும் செய்திகள்