கட்டு காட்டாக பணத்துடன் வந்த வாகனம் - தட்டி தூக்கிய பறக்கும் படை..!

Update: 2024-03-29 17:25 GMT

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட 11 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஒலக்கூர் மேம்பாலம் அருகே தேர்தல் பறக்கும் படையினர், தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை மடக்கி சோதனை செய்த போது, அதில் 11 லட்சத்து 72 ஆயிரம் இருந்தது தெரிய வந்தது. அதற்கு உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால் அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து, திண்டிவனம் சார் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்