இலங்கை அதிபர் தேர்தலில் ரணில் விக்கிரம சிங்கவுக்கோ, சஜித் பிரேமதாசாவுக்கோ ஆதரவளிக்க போவதில்லை என முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் வேட்பாளர் சஜித் இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என விமர்சித்துள்ளார். மேலும் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபகஷேவுக்கே ஆதரவு அளிப்பதாகவும் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.