தேர்தல் ஆணையத்துக்கு சென்னை ஐகோர்ட் போட்ட உத்தரவு

Update: 2024-02-15 11:34 GMT

தேர்தல் வேட்பாளர்களின் உடற்தகுதி பற்றி கேட்க முடியுமா என்பது குறித்து, தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்புமனு தாக்கலில் மருத்துவ பரிசோதனையை சமர்பிக்க உத்தரவிடக் கோரி, கடந்த 2016-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநலமனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், உடல்நிலை என்பது தனிப்பட்ட விஷயம் என்பதால் அதுகுறித்த விவரங்களை கேட்க முடியாது என அரசுத்தரப்பு வாதிட்டது. மருத்துவ காப்பீடு பெற மருத்துவ பரிசோதனை அறிக்கைகளை தருவதுபோல், வேட்பாளர்களும் அறிக்கை தர வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து உடற்தகுதி சான்றை சமர்ப்பிக்க வேட்பாளர்களை வலியுறுத்த முடியுமா என்பது குறித்து, தேர்தல் ஆணையம் பதிலளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்