திருச்சி என்.ஐ.டி.யில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், புகார் அளிக்க சென்ற மாணவியை காவல்நிலையத்தில் இழிவாக பேசியதாக தகவல் வருகிறது என குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்களிடம் காவல்துறையினர் இதுபோன்று நடந்துகொள்வதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்து, இதுபோன்று சம்பவங்கள் நிகழாத வகையில் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.