அமலாக்கத்துறையின் பொறுப்பு இயக்குநராக ராகுல் நவீன் நியமிக்கப்பட்டுள்ளார். அமலாக்கத் துறை இயக்குநர் எஸ்.கே. மிஸ்ராவுக்கு 3வது முறை பதவி நீட்டிப்பு வழங்கியதை ரத்து செய்த உச்சநீதிமன்றம், செப்டம்பர் 15-ம் தேதி நள்ளிரவுக்குமேல் அவர் இயக்குனராக நீடிக்க கூடாது எனவும் தெளிவுபடுத்தியது. இந்நிலையில், அமலாக்கத்துறையின் சிறப்பு இயக்குனராக உள்ள ராகுல் நவீனை, பொறுப்பு இயக்குனராக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். அமலாக்கத் துறைக்கு இயக்குனர் நியமிக்கப்படும் வரை, ராகுல் நவீன் பொறுப்பு இயக்குனராக தொடர்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.