தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறவியிலேயே காது கேளாமை குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு நவீன சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக, கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் தெரிவித்தார். மேலும், அறுவை சிகிச்சை மூலம் செவித்திறன் கோளாறை சரி செய்ய முடியாத நபர்களுக்கு, இலவசமாக செவித்திறன் எந்திரமும் வழங்கப்படுவதாக, அவர் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து இளைஞர்கள் தங்களது செவித்திறனை பாதுகாத்துக்கொள்ள அறிவுரையும், அவர் வழங்கினார்.