வருமானத்தை விட 102.7 சதவீதம் அதிகமாக சொத்து சேர்த்ததாக சார்பதிவாளர் மற்றும் மனைவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேலூர் அடுத்த வல்லம் கிராமம் கந்தசாமிநகரை சேர்ந்த நித்தியானந்தம்,
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பதிவுத்துறை அலுவலகத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டில் நடத்தப்பட்ட 13 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணமும், 80 சவரன் தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. கிட்டத்தட்ட கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் நித்தியானந்தம் தனது பெயரிலும், மனைவி பெயரிலும 30 லட்ச ரூபாய் மதிப்பிலான அசையும், அசையாத சொத்துகளை வாங்கி உள்ளார்.