ஹெவி வசூல்... திடீர் என்ட்ரியால் சிக்கிய சப் ரிஜிஸ்டர்... வீட்டிலும் சல்லடை போட்ட அதிகாரிகள்
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் சார் பதிவாளர் அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று திடீர் சோதனைய நடத்தினர். சோதனையில் 2 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சார்பதிவாளர் வேல்முருகன் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி சென்றனர். சார்பதிவாளர் வீட்டில் லஞ்சம் ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.