சிறுவர்களுக்கு போதை மாத்திரை.. வேட்டையில் இறங்கி அதிர்ந்த போலீசார்.. பரபரத்த காட்பாடி

Update: 2024-09-05 07:29 GMT

போதை ஊசி தயார் செய்து சிறார்களுக்கு விற்பனை செய்தவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்

வேலூர், மாவட்டம் காட்பாடியில், வலி நிவாரணி மாத்திரை மூலமாக போதை ஊசி தயார் செய்த இருவரை, கடந்த சில நாட்களுக்கு முன்பாக போலீசார் கைது செய்திருந்தனர். இந்த நிலையில், முத்து மண்டபம் பகுதியில் ரோந்து பணியில் இருந்த போலீசார், இளம் சிறார்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்து கொண்டிருந்த ஓல்டு டவுனை சேர்ந்த கிஷோர்குமார் என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பள்ளிகொண்டாவைச் சேர்ந்த அபிஷேக் என்பவரிடம் போதை மாத்திரை மற்றும் போதை ஊசிகளை வாங்கி விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து திவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், போதை ஊசி மற்றும் மாத்திரை விற்பனையில் தொடர்புடைய ரஞ்சித், விக்னேஷ், பூபாலன், சிவகுமார் ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 1100 போதை மாத்திரைகள், ஒரு கார், ஐந்தாயிரம் ரொக்கப்பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். முக்கிய குற்றவாளியான அபிஷேக் பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரை பிடிக்க எஸ்பி தனிப்படை பெங்களூரு விரைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்