காரைக்குடி அருகே பேரூராட்சி கூட்டத்தில் கேள்வி எழுப்பியது தொடர்பாக திமுக - பாஜகவினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது. புதுவயல் பேரூராட்சியின் மாதாந்திர கூட்டத்தில், பாஜக உறுப்பினர் செல்வா கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. கூட்டத்திற்கு பின்னர் பேரூராட்சி துணைத் தலைவர் அலி மற்றும் பாஜக பிரமுகர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாகியது. இதில் பாஜகவை சேர்ந்த சிலருக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து மறியலில் ஈடுபட முயன்ற பாஜகவினரிடம், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டம் கைவிடப்பட்டது.