தீபாவளி கொண்டாட சென்ற ஊராட்சி மன்ற தலைவருக்கு நேர்ந்த விபரீதம்

Update: 2024-11-04 02:31 GMT

தீபாவளி கொண்டாட சென்ற ஊராட்சி மன்ற தலைவருக்கு நேர்ந்த விபரீதம்

உசிலம்பட்டி அருகே நண்பர்களுடன் கிணற்றில் குளிக்க சென்ற கொடைக்கானல் - பூம்பாறை ஊராட்சி மன்ற தலைவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் - பூம்பாறை கிராம ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் கோபால கிருஷ்ணன். இவர், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வாலாந்தூர் - வீரபாண்டியைச் சேர்ந்த சங்கிலி என்ற நண்பரின் வீட்டிற்கு தீபாவளியை கொண்டாட நண்பர்களுடன் சென்றுள்ளார்.

சங்கிலியின் தோட்டத்து கிணற்றில் நண்பர்களுடன் குளித்தபோது நீச்சல் தெரியாத கோபால கிருஷ்ணன், எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்

தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் வாலாந்தூர் காவல் நிலைய போலீசார், சுமார் 40 அடி ஆழமுள்ள கிணற்றில் சுமார் ஒன்றரை மணி நேர போராட்டத்திற்கு பின் கோபால கிருஷ்ணனின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.,

Tags:    

மேலும் செய்திகள்