தீபாவளி போனஸ் கேட்ட கஸ்டமர்.. மறுத்த பெட்ரோல் பங்க் ஊழியருக்கு சரமாரி தாக்கு.. அதிர்ச்சி வீடியோ
கரூர் குளித்தலை அருகே பெட்ரோல் பங்க்கில் தீபாவளி போனஸ் விவகாரத்தில் ஊழியர் தாக்கப்படும் வீடியோ வெளியாகியுள்ளது... வெள்ளபட்டி களத்து வீட்டில் பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது... இங்கு வருடந்தோறும் அதிக அளவு எரிபொருள் நிரப்பும் வாகனங்களுக்கு தீபாவளி போனஸ் கொடுப்பது வழக்கம். பெட்ரோல் பங்க் அருகே வசிக்கும் சின்னசாமி என்பவர் தனது கதிரடிக்கும் இயந்திரம், ஜேசிபி, டிராக்டருக்கு இங்கு தான் டீசல் நிரப்புவாராம். இந்நிலையில் இன்பரசு என்பவர் பணியில் இருந்த போது சின்னசாமி தனது ஆட்களுடன் வந்து போனஸ் கேட்டு தகராறு செய்து 500 ரூபாய் கொடுத்து ரசீதில் கையெழுத்திட கேட்டுள்ளார். இன்பரசு மறுத்ததால் அவர்கள் அவரைத் தாக்கியுள்ளனர்... இதுகுறித்து போலீசார் சின்னசாமி உள்ளிட்ட மூவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.