வசூலான வரிப்பணத்தில் கைவரிசை.. விசாரணையில் அடுத்தடுத்து சிக்கிய அதிகாரிகள்

Update: 2024-08-09 05:22 GMT

திண்டுக்கல் மாநகராட்சியில் 4 கோடியே 66 லட்ச ரூபாய் கையாடல் செய்த விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பெண் அலுவலர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாநகராட்சியில் கணக்குப் பிரிவு இளநிலை உதவியாளராக பணியாற்றிய சரவணன் என்பவர், வசூலாகும் வரி பணத்தில் இருந்து 4 கோடியே 66 லட்ச ரூபாயை போலி ஆவணங்களை தயார் செய்து கையாடல் செய்தார். இந்த முறைகேடு தெரியவந்து, சரவணன், கண்காணிப்பாளர் சாந்தி, நிர்வாக அலுவலர் வில்லியம் சகாயராஜ், இளநிலை உதவியாளர் சதீஷ் ஆகியோரை மாநகராட்சி ஆணையர் சுப்பிரமணி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, சரவணனை கைது செய்து, காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது, மேலும் சில அலுவலர்களுக்கு முறைகேட்டில் தொடர்பு இருப்பது தெரியவந்ததால் சாந்தி, வில்லியம் சகாயராஜ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்