இளைஞர் உயிரை பறித்த இன்டிகேட்டர் - நெஞ்சை நிறுத்தும் சிசிடிவி காட்சி

Update: 2024-07-29 15:33 GMT

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில், இன்டிகேட்டர் போடாமல் திடீரென திரும்பிய பைக்கால் சாலையில் ஏற்பட்ட விபத்தின் சிசிடிவி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிலக்கோட்டை - மதுரை சாலையில் நடந்த இந்த விபத்தில் பள்ளப்பட்டி மாலை தெருவை சேர்ந்த 19 வயது இளைஞர் காமாட்சி என்பவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தொடர்ந்து, கோபிநாத் மற்றும் அஜித்குமார் ஆகியோர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்