தமிழகத்தின் மையத்தில் இப்படி ஒரு கிராமமா?.. புளியமர உச்சி தான் ஒரே வழி

Update: 2024-08-29 13:13 GMT

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செல்போன் டவர் வசதி அமைத்து தர வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நத்தம் சட்டமன்றத் தொகுதி, சாணார்பட்டி ஒன்றியத்தில், 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களும், 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளும் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அலைபேசியை பயன்படுத்த டவர் வசதி இல்லாததால், தகவல் தொடர்பின்றி தனி தீவில் இருப்பதுபோல் தவித்து வருவதாக தெரிவிக்கின்றனர். இங்குள்ள ஆண்களுக்கு திருமணத்திற்கு பெண் கொடுக்க கூட வெளியூரை சேர்ந்தவர்கள் தயங்குவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

டவர் கிடைக்கும் இடமாக தேடிச் சென்று பேசி வரும் நிலையில், புளியமரத்தின் உச்சியில் ஆபத்தான நிலையில் ஏறி நின்று சிலர் பேசி வருகின்றனர். இணைய வசதியை பயன்படுத்த முடியாமலும், அவசர தேவைக்கு 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மருத்துவ வசதிகளை கூட பயன்படுத்த முடியாமலும் உள்ளதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்