தங்கச் சங்கிலிக்கு பாலிஷ்..! -தனியாக இருந்த பெண்ணிடம் கைவரிசை... வடமாநில இளைஞர்களை ரவுண்டு கட்டிய

Update: 2024-02-01 04:07 GMT

வேடசந்தூர் அருகே உள்ள நல்லமநாயக்கன்பட்டியை சேர்ந்த கோமதி என்பவர் வீட்டில் தனியாக இருந்தபோது, அங்கு வந்த 3 வடமாநில இளைஞர்கள், தங்க நகைகளை பாலிஷ் செய்து தருவதாகக் கூறியுள்ளனர். அதனை நம்பி வீட்டில் இருந்த 4 சவரன் தங்கச் சங்கிலியை பாலிஷ் செய்வதற்காக கோமதி கொடுத்துள்ளார். அப்போது, அந்த வட மாநில இளைஞர்கள், கோமதியின் கையில் ரசாயன பொடியை தடவவே, அவர் மயங்கியுள்ளார். அதன் பின்னர் அந்த வட மாநில இளைஞர்கள், ரசாயன திரவத்தில் தங்கச் சங்கிலியை முக்கி எடுத்து, பாலிஷ் செய்து கொடுத்துவிட்டு தப்பிச் சென்றனர். சிறிது நேரம் கழித்து கோமதியின் கணவர் வேல்முருகன் வீட்டிற்கு வரவே, மனைவியின் பாதி மயக்கநிலையில் நடந்ததைக் கூறியுள்ளார். பின்னர் கோமதியை மருத்துவமனையில் அனுமதித்த கணவர், தங்கச் சங்கிலியை வங்கிக்கு எடுத்துச் சென்று எடை போட்டதில், நான்கு சவரன் சங்கிலியில் ஒன்னேகால் சவரன் அளவிற்கு எடை குறைந்திருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து வேல்முருகன் அதே பகுதியில் சுற்றித் திரிந்த வடமாநில இளைஞர்களை, பொதுமக்கள் உதவியுடன் மடக்கிப் பிடித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்