இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை - வெளியான முக்கிய தகவல்..

Update: 2024-09-21 16:39 GMT

நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும், நிதிச்சேவைகள் துறை, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை ஊக்குவித்து வருகிறது.

யுபிஐ போன்ற புரட்சிகரமான பரிவர்த்தனை முறையால், கோடிக்கணக்கானவர்கள் உடனடியான, பாதுகாப்பான மற்றும் தடையற்ற பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடிகிறது.

முந்தைய நிதியாண்டுகளுடன் ஒப்பிடுகையில் கடந்த 2023-24-ம் நிதியாண்டில் இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது.

கடந்த 2017-18-ஆம் நிதியாண்டில் 2,071 கோடி ரூபாயாக இருந்த டிஜிட்டல் பரிவர்த்தனை 2023-24-ஆம் நிதியாண்டில் 18 ஆயிரத்து 737 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

மேலும், நடப்பு நிதியாண்டின் 5 மாதங்களில் பரிவர்த்தனை அளவு 8 ஆயிரத்து 659 கோடி ரூபாயை எட்டியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், பூட்டான், நேபாளம், இலங்கை, பிரான்ஸ், மொரீஷியஸ் ஆகிய 7 நாடுகளில் யுபிஐ பரிவர்த்தனை தற்போது நடைமுறையில் உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்