தொடங்கியது வேலை... டெவலப் ஆகும் டெல்டா

Update: 2024-08-10 12:14 GMT

டெல்டா மாவட்டங்களில் வேளாண் பெரும் தொழில் வழித்தடத்திற்கான திட்ட மேலாண்மை அலகை அமைக்கும் பணியை குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை தொடங்கியுள்ளது.

தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் வேளாண் சார்ந்த தொழில் நிறுவனங்கள் துவக்குவதை ஊக்குவிக்க, வேளாண் பெரும் தொழில் வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான விரிவான திட்டஅறிக்கையை, குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள்  துறையின் கீழ் இயங்கும் குறு, சிறு, நடுத்தர தொழில்கள் வசதியாக்கல் நிறுவனம் தயாரித்தது. இதனைத் தொடர்ந்து வேளாண் தொழில் வழித்தட பணிகளை, ஆயிரத்து௧௭௦ கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்தது.

இந்நிலையில், வேளாண் பெரு தொழில் வழித்தடத்திற்கான திட்ட மேலாண்மை அலகை அமைக்கும் பணியை குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை தொடங்கியுள்ளது. திட்டம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துதல், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருதல், தொழில் பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுதல், விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தல் உள்ளிட்ட பணிகளை இந்த அமைப்பு மேற்கொள்ள உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்