வீடு தேடி ஆடி வரும் தெய்வங்கள்.. மெய் சிலிர்க்க வைக்கும் குலசை தசரா | Dasara Kulasai

Update: 2024-10-11 05:03 GMT

முத்தாரம்மன் கோவில் திருவிழாவில், பக்தர்கள் தங்களின் நேர்த்தி கடனுக்காக பல விதமான வேடம் அணிந்து ஊர் ஊராகச் சென்று காணிக்கை பெற்று அம்மனுக்கு செலுத்துவார்கள். அதன்படி, காளி, முருகன், விநாயகர், கிருஷ்ணன், ராமர் போன்ற பல்வேறு வேடங்கள் அணிந்த பக்தர்கள், காணிக்கை பெறுவதற்காக, குலசேகரப்பட்டினம் அருகே உள்ள சுற்று வட்டார கிராமங்களில் முகாமிட்டுள்ளனர். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும், மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் இருந்து வந்த 400-க்கும் மேற்பட்ட தசரா குழுவினர், கிராமம் கிராமமாக சென்று காணிக்கை பெற்று வருகிறார்கள். இதனால் குலசேகரபட்டினம் சுற்றி உள்ள ஊர்களில் தசரா குழுவினரின் ஆட்டம் களைகட்டி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்