"ஏமாற்றிய சென்னை IIT காதலி"-ஆத்திரத்தில் பெண்களை மட்டுமே குறிவைத்து US இன்ஜினியர் செய்த பகீர்காரியம்

Update: 2024-05-29 05:08 GMT

மேட்ரிமோனி இணையதளத்தில் பத்துக்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட ஐ.ஐ.டி.,யில் பட்டமேற்படிப்பு படித்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இவர் தான் இணையதளத்தில் பத்துக்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபர்...

IIT.,யில் எம்.டெக்... அமெரிக்க யுனிவர்சிட்டியில் எம்.எஸ் என பல்வேறு பட்டப் படிப்புகளை படித்து அதனை மோசடிக்கு பயன்படுத்திய சைபர் குற்றவாளி சிக்கியது எப்படி...?

சென்னை கொளத்தூரைச் சேர்ந்த கணவனை இழந்து மகனோடு தனியாக வாழ்ந்து வரும் பெண் ஒருவர் சில தினங்களுக்கு முன்பாக சென்னை மேற்கு மண்டல சைபர் கிரைம் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில்,

மேட்ரிமோனியல் இணையதளம் மூலமாக தொடர்பு கொண்ட கார்த்திக் என்ற நபர் தனக்கு திருமணமாகி விவாகரத்து நடந்திருப்பதாக கூறியிருக்கிறார்..தற்போது தான் அமெரிக்காவில் சாஃப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வருவதாகவும் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி 5 லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து இருந்தார்.

விசாரணை மேற்கொண்ட மேற்கு மண்டல சைபர் கிரைம் போலீசார், பணம் அனுப்பிய வங்கி கணக்கை ஆய்வு செய்தனர்.அப்போது, அந்த வங்கிக் கணக்கு விருகம்பாக்கத்தைச் சேர்ந்த மற்றொரு இளம் பெண்ணுக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது.

அந்த இளம் பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, தன்னுடைய காதலர் பிரசாந்த் என்பவர் அமெரிக்காவின் டிஃபன்ஸ் துறையில் டேட்டா அனலைஸ்டாக பணிபுரிந்து வருவதாகவும், சில தினங்களுக்கு முன்பாக சென்னையில் ஒரு நபர் தனக்கு பணம் தர வேண்டும் எனவும் தன்னிடம் இந்திய வங்கி கணக்கு இல்லை என்பதால் தன்னிடமிருந்து வங்கிக் கணக்கை வாங்கி கொடுத்ததாக கூறியுள்ளார்.பின்னர் அதில் ரூபாய் 5 லட்சம் பணம் வந்ததையும் அந்த பெண், போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

5 லட்சத்தில் மூன்று லட்ச ரூபாயை வளசரவாக்கத்தில் உள்ள மற்றொரு நபருக்கு அனுப்ப வேண்டும் என தனது காதலர் கூறியதன் பேரில் மூன்று லட்ச ரூபாய் பணம் அனுப்பியதாகவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து வளசரவாக்கம் பகுதியை சேர்ந்த அந்த நபரின் வங்கி கணக்கையும் போலீசார் ஆய்வு செய்தனர். அதுவும் மற்றொரு இளம்பெண்ணுக்கு சொந்தமானதை அறிந்தனர்.

இதனையடுத்து அந்த இளம்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். அவரும்,

பிரசாந்த் ஆனந்த் என்ற தனது காதலர் அமெரிக்காவில் பணிபுரிந்து வருவதாகவும் மேட்ரிமோனியில் இணையதளம் மூலமாக அறிமுகமாகி சில மாதங்களில் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார். அந்த பெண்ணிடம் இருந்து மிளகாய்ப்பொடி வியாபாரம் செய்வதாக கூறி சுமார் 4 லட்சம் பணம் பெற்றதும் தெரியவந்தது

அவரிடம் இருந்தும் சுமார் 7 லட்சம் பணப்பறிப்பில் அந்த நபர் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது.

மிளகாய் பொடி வியாபாரத்திற்காக ஹரிஹரன் என்ற நபர் மூலமாக பணம் வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஹரிஹரன் என்ற நபரை பின் தொடர்ந்து இளம் பெண்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி வந்த நபரை கைது செய்தனர்.

அவரை காவல் நிலையம் அடித்து வந்து விசாரணை மேற்கொண்ட போது அவர், தென்காசி TNHB காலனி பகுதியைச் சேர்ந்த ஜார்ஜ் குமார் துரை என்பது தெரியவந்தது.

அவர் BTech பட்டப்படிப்பை சென்னையில் உள்ள பிரபல தனியார் பல்கலைக்கழகத்தில் படித்திருப்பதும், MTech படிப்பை சென்னை IIT.,யில் படித்திருப்பதும், MS பட்ட மேற்படிப்பு அமெரிக்காவின் புகழ்பெற்ற ஸ்டாம்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்திருப்பதும் தெரியவந்தது.

பட்டம் மேற்படிப்பை படித்துவிட்டு கடந்த 2016 முதல் 2019 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவில் சாஃப்ட்வேர் துறையில் டேட்டா அனலைஸ்டாக பணிபுரிந்து வந்துள்ளார். தமிழகம் திரும்பி கடந்த 4 ஆண்டுகளாக 20-க்கும் மேற்பட்ட பெண்களிடம் மேட்ரிமோனியல் மூலமாக அறிமுகமாகி ரூபாய் 80 லட்சத்திற்கு மேல் மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

மோசடி செய்யப்பட்ட பணத்தில் தென்காசியில் தனது வீட்டு அருகே சிறுவர்களுக்கான 'கிட்ஸ் ஸ்கூல்' நடத்தி வருவதும் தெரிய வந்தது.

அதோடு, மிளகாய்பொடி நிறுவனம் ஒன்றை அவர் நடத்தி வந்ததும் தெரியவந்தது.

மேட்ரிமோனியல் இணையதளத்தில் கார்த்திக், கார்த்திக் சந்திரன், பிரசாந்த் ஆனந்த், பிரசாத் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட போலி கணக்குகளை உருவாக்கி சமூக வலைதளங்களில் கிடைக்கும் அழகான ஆண் நபர்கள் புகைப்படத்தை எடுத்து அதன் மூலமாக இளம்பெண்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி பணம்பறித்து வந்ததும் தெரியவந்தது

அமெரிக்க நம்பர் கொண்ட வாட்ஸ் அப் எண்ணில் இருந்து கால் செய்து பேசி அவர்களை நம்ப வைத்து மோசடி செய்ததும் தெரியவந்தது.

IIT.,யில் எம்.டெக் படித்துக் கொண்டிருந்தபோது ஒரு பெண்ணை காதலித்ததாகவும், தன்னிடம் பணம் இல்லாததால் அந்த பெண் தன்னை விட்டு சென்றுள்ளார் எனவும், அதனால் பெண்களிடம் மட்டுமே மோசடி செய்து வருவதாகவும் போலீசாரிடம் கைது செய்யப்பட்டுள்ள ஜார்ஜ் குமார் துரை தெரிவித்துள்ளார்.

இதுவரை 20க்கும் மேற்பட்ட பெண்களிடம் அவர் மோசடி செய்துள்ளதாக போலீசார் தெரிவித்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இவரின் மோசடியால் பாதிக்கப்பட்ட பெண்கள் யார்? என்ற தகவல் முழுமையான விசாரணைக்கு பின்னரே தெரியவரும்..

Tags:    

மேலும் செய்திகள்