கடலூரில் தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், தகுதியற்ற 20 வாகனங்களை இயக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளார். மஞ்சக்குப்பம் மைதானத்தில் 187 வாகனங்களில் எமர்ஜென்சி எக்ஸிட் உள்ளதா? வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா?, ஜி.பி.எஸ். கருவியுடன் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்யப்பட்டது. ஆய்விற்குப் பின் தகுதி இல்லாத 20 வாகனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. வாகனங்களில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்த பிறகு வாகனங்களை இயக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.