"உடைந்த பனிக்குடம்.. கண்டுக்காத நர்ஸ் வெளியே வந்த தலை" - கண்கலங்க வைக்கும் தாயின் வார்த்தை

Update: 2024-08-09 16:51 GMT

கடலூர் மாவட்டம் சிவக்கம் கிராமத்தில் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. அதே கிராமத்தை சரிதா என்பவர் பிரசவ வலி ஏற்பட்டதால் பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவருக்கு பனிக்குடம் உடைந்த நிலையில், பணியில் இருந்த செவிலியர் ஆம்புலன்ஸ் மூலம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால், சிறிது நேரத்திலேயே ஆம்புலன்சில் சரிதாவுக்கு குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் தலை வெளியே வந்த‌தாகவும், ஆனால், இதுகுறித்து தெரிவித்தும் செவிலியர் கண்டுகொள்ளாமல் அனுப்பி வைத்த‌தாகவும் சரிதா குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு வசதிகள் இருந்த வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்போது எந்த வசதியும் இல்லை என அப்பகுதி மக்களும் புகார் தெரிவித்துள்ளனர்...

Tags:    

மேலும் செய்திகள்