"கூட்டத்தை ஸ்கிப் பண்ணுங்க.." - "போட்டிங் டிக்கெட் எடுக்க இனி லைன்ல நிக்க வேண்டாம்"
கடலூர் மாவட்டம் பிச்சாவரம் சுற்றுலா மையத்தில், கடந்த வாரம் கட்டுக்கடங்காத கூட்டம் வந்த நிலையில், ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்நிலையில், சுற்றுலா பயணிகளின் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், அவர்களை திருப்பி அனுப்பாமல் தவிர்க்கவும், க்யூ ஆர் கோட் மூலம் படகு சவாரிக்கு முன்பதிவு செய்யும் வசதியை சுற்றுலா மையம் ஏற்பாடு செய்துள்ளது. இதன்மூலம், சுற்றுலா பயணிகள் தங்களுக்கு தேவையான நேரத்தில் முன்பதிவு செய்து சுற்றுலா மையத்திற்கு வரமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.