கடைசி பெஞ்சில் உட்கார்ந்து மாணவர்களுடன் தமிழ்பாடம் கற்ற அமைச்சர் அன்பில் மகேஷ்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் 7 ஆம் வகுப்பு மாணவர்களுடன் அமர்ந்து ஆசிரியர் நடத்திய தமிழ் பாடத்தை கவனித்தார். கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் அரசு உயர்நிலை பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட அவர், ஏழாம் வகுப்பறைக்குள் சென்று மாணவர்களுடன் கடைசி பெஞ்சில் அமர்ந்து ஆசிரியர் சொல்லித் தரும் புறநானூறு பாடலை கவனித்தார்.