சொந்த கட்சி மேயருக்கு எதிராக கவுன்சிலர்கள் போர்க்கொடி...கடலூரில் பரபரப்பு

Update: 2024-01-29 15:59 GMT

மொத்தம் 45 வார்டுகளை கொண்ட கடலூர் மாநகராட்சி மேயராக, திமுகவைச் சேர்ந்த சுந்தரி ராஜா பணியாற்றி வருகிறார். மேயர் தலைமையில் திமுக கவுன்சிலர்கள் ஒரு அணியாகவும், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் தலைமையில் திமுக கவுன்சிலர்கள் ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். 10 வார்டுகளில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், இதுநாள் வரை எந்தவிதமான அடிப்படை வசதியும் செய்து தராமல் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக குற்றம்சாட்டினர். இது சம்பந்தமாக அமைச்சர்கள் உதயநிதி, எம்ஆர்கே.பன்னீர்செல்வம் ஆகியோர்

உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திய கவுன்சிலர்கள்,

தவறும் பட்சத்தில் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தெரிவித்தனர். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 31-ஆம் தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்