அதி காலையில் கண் விழித்ததும் கண்ட காட்சி.. பார்த்ததும் பதைபதைத்த மனசு.. "அய்யோ எல்லாம் போச்சே"

Update: 2024-05-20 15:59 GMT

கடலூர் அடுத்த வெள்ளப்பாக்கம் பகுதியில் உள்ள டிரஸ்டுக்கு சொந்தமான 10 ஏக்கர் விளை நிலத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சுசீலா தேவநாதன் உள்ளிட்ட 4 பேர், 5 ஏக்கரில் வாழையும், 5 ஏக்கரில் கரும்பும் சாகுபடி செய்துள்ளனர். இந்த இடம் தொடர்பாக சுசிலா தேவநாதன் தரப்பினரும், மற்றொரு தரப்பினரும் தங்களுக்கு சொந்தமான இடம் என்று கூறி வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் இன்று அதி காலை மர்ம நபர்கள், டிராக்டர்கள் மூலம் வாழை மற்றும் கரும்பு பயிர்களை உழவு செய்து அழித்துள்ளனர். இதனால் 10 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழை மற்றும் கரும்பு பயிர்கள் அனைத்தும் சேதமாகின. சேத மதிப்பு 20 லட்சம் ரூபாய் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சுசிலா தேவநாதன் மற்றும் அவரது தரப்பினர் கடலூர்- நெல்லிக்குப்பம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் போராட்டம் கைவிடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்