உலகின் மிகச் சிறிய கடல் எது? - 2 நாடுகளிடையே வெடித்த மோதல்

Update: 2024-07-25 06:10 GMT

உலகின் மிகச் சிறிய கடல் எது? - 2 நாடுகளிடையே வெடித்த மோதல்

குரோஷியாவின் அட்ரியாடிக் கடலின் கரையோரம் அமைந்துள்ள சிறிய விரிகுடா பகுதியில் வசித்து வரும் மக்கள், அங்கு வெறும் ஆறு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள கரின் கடலை உலகின் மிகச்சிறிய உள்நாட்டு கடல் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் மூலம் அந்த பகுதி மிக சிறந்த சுற்றுலா தலமாக விளங்கும் என்பது அவர்களின் கருத்தாக உள்ளது. தற்போது ஆசியா மற்றும் ஐரோப்பாவுக்கு இடையே அமைந்துள்ள துருக்கியின் மர்மரா கடல் தான் உலகின் மிகச் சிறிய உள்நாட்டு கடலாக அறியப்படுகிறது. இது சுமார் பதினோராயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்