திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்புராயன் பிரச்சாரத்தின் போது, பொதுமக்களை தாக்கிய திமுக நிர்வாகியின் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. பவானி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அம்மாபேட்டை ஒன்றியம் பி.கே பழையூர் பகுதியில், திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே. சுப்புராயன் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது கூட்டணி கட்சியை சேர்ந்த திமுக நிர்வாகி, அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவரை அடிக்கும் வீடியோ காட்சி, இணையத்தில் வெளியாகி வைரலாக வருகிறது.