சிபிசிஎல்-க்கு ஓங்கி குட்டு... ரூ.5 கோடி அபராதம்... தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி

Update: 2024-05-22 15:55 GMT

நாகப்பட்டினம் மாவட்டம் பட்டினச்சேரி அருகே சிபிசிஎல் நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் குழாயில் இருந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் கச்சா எண்ணெய் கசிந்து கடலில் கலந்தது. இதனால் மீனவர்களும் சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இது தொடர்பாக விசாரணை நடத்த நாகை மாவட்ட ஆட்சியர், மத்திய மாநில மாசுகட்டுப்பாட்டு வாரிய பொறியாளர்கள் உள்ளிட்டோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 10 டன் அளவிலான கச்சா எண்ணெய் கடலில் கலந்ததாக அந்த குழு அறிக்கை சமர்ப்பித்தது. இந்த நிலையில் எண்ணெய் கசிவு ஏற்படுத்திய குற்றத்திற்காக சிபிசிஎல் நிறுவனம் 5 கோடி ரூபாய் தொகையை அபராதமாக தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு செலுத்த வேண்டும் என உத்தரவிட்ட தீர்ப்பாயம், வழக்கை முடித்து வைத்தது.

Tags:    

மேலும் செய்திகள்