பிறந்த பிஞ்சு குழந்தைக்கு `இதய ஆபரேஷன்’ - 4 மணி நேரம் திக்..திக்.. கடவுளாக நின்று காத்த டாக்டர்கள்
கோவை தனியார் மருத்துவமனையில், பிறந்து 7 நாள்களே ஆன குழந்தைக்கு வெற்றிகரமாக இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் பிறந்த குழந்தைக்கு, பிறவியிலேயே இதய கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்து, அறுவை சிகிச்சைக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடத்தி முடிக்கப்பட்டு, குழந்தை நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.