கோவையில் மனித ரத்தம் குடித்த சீட்டா.. கோரமாக்கப்பட்ட சிறுமி.. பெற்றோரால் கூட முகத்தை பார்க்க முடியல
கோவையில் மனித ரத்தம் குடித்த சீட்டா.. கோரமாக்கப்பட்ட சிறுமி.. பெற்றோரால் கூட முகத்தை பார்க்க முடியல
வால்பாறை அருகே சிறுமியை சிறுத்தை புலி கொடூரமாக தாக்கி கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது....
வால்பாறையில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதிகளில் அவ்வப்போது புலிகள், யானைகள், கரடிகள் உள்ளிட்டவை கூட்டம் கூட்டமாக வலம் வருகின்றன. இவைகளால், அங்கு தேயிலை தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் பலரும் எப்போதும் அச்சத்துடனே தங்களது அன்றாட பணிகளை செய்து வருகின்றனர்.
வால்பாறை அருகே உள்ள ஊசிமலை மட்டம் எஸ்டேட் பகுதியில் நசீரான்கதும் என்ற வடமாநில தொழிலாளி தனது குடும்பத்துடன் தங்கி அங்குள்ள தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில், இவர் தனது 4 வயது குழந்தை அப்சாருடன் தேயிலைத் தோட்டத்தில் கீரை பறித்துக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கே பதுங்கி இருந்த சிறுத்தைப்புலி ஒன்று, திடீரென கண்ணிமைக்கும் வேளையில் சிறுமி அப்சார் மீது பாய்ந்த சிறுத்தைப்புலி சிறுமியின் கழுத்தைக் கவ்விக் கொண்டு தேயிலை தோட்டத்திற்குள் சென்றது.
இதனால், செய்வது அறியாது தவித்த சிறுமியின் பெற்றோர், அங்கு இருந்தவர்களின் உதவியோடு தேடிய சூழலில் கடைசியில் சிறுமி அப்சாரை சடலமாக கண்டுபிடித்துள்ளனர்.
அன்போடு அரவணைத்து வளர்த்த தனது மகளை சிறுத்தைப் புலியிடம் பலி கொடுத்து விட்ட சிறுமியின் தந்தைக்கு நேர்ந்த இந்த துயரம், வேறு யாருக்கும் நேரக்கூடாத ஒன்று. தோட்டத்தில் பதுங்கி இருந்து சமயம் பார்த்து தாக்கிய சிறுத்தைப் புலியால், சிறுமிக்கு நேர்ந்த இந்நிலையைக் கண்டு சக தொழிலாளர்களும் பயந்தில் உறைந்து போய் உள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த வால்பாறை போலீசார், சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பட்டப்பகலில் வடமாநில தொழிலாளியின் குழந்தையை சிறுத்தைப்புலி கடித்துக் கொன்ற சம்பவம் வால்பாறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சிறுத்தைப்புலியைக் கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என அப்பகுதியினர் வனத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.