கோவையில் நாளை.. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான திட்டத்தை துவக்கி வைக்கும் முதல்வர்

Update: 2024-08-08 14:51 GMT

தமிழ்ப் புதல்வன் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கோவையில் நாளை துவக்கி வைக்கவுள்ளார்.

அரசுப் பள்ளிகளில் படித்துக் கல்லூரிகளில் சேரும் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தால் 3 லட்சம் மகளிருக்கு மேல் பயன்பெறுவதைப் போல

பள்ளிக் கல்வி முடித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரித்திட அவர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் பாடப் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி அவர்களது கல்வியை மெருகேற்றிட உதவும் வகையில்,

மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படவுள்ளது...

இந்த திட்டத்தின் வாயிலாக, அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுக் கல்லூரிகளில் சேரும் ஏறத்தாழ 3 லட்சத்து 28 ஆயிரம் கல்லூரி மாணவர்கள் மாதந்தோறும் பயனடைவார்கள்.

இந்த திட்டத்திற்காக தமிழக அரசு 360 கோடி ரூபாயை இந்த ஆண்டிற்கு அனுமதித்துள்ளது.

பொருளாதார வசதிக் குறைவு உட்பட பல்வேறு காரணங்களால் பள்ளிப் படிப்பிற்குப் பின் உயர் கல்வியைத் தொடர முடியாத நிலையில் இருந்த மாணவர்களுக்கு உயர்கல்வியில் சேர இத்திட்டம் உதவுவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்