கோவை வந்துள்ள சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள், புற்று நோய் சிகிச்சை பெறும் சிறுவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். புச்சி பாபு கிரிக்கெட் போட்டி 2024-க்காக, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்டோர் கோவை வந்துள்ளனர். அவர்கள், ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை ஆராய்ச்சி மையத்தில், சிகிச்சை பெற்றுவரும் 14 குழந்தைகளை நேரில் சந்தித்தனர். அவர்களை சிவப்பு ரோஜாக்களை வழங்கி வரவேற்றனர். பின்னர், கையொப்பமிட்ட மினி கிரிக்கெட் பேட்கள், நினைவு பரிசுகள் உள்ளிட்டவற்றை வழங்கிய கிரிக்கெட் வீரர்கள், சிறுவர்களுடன் கலந்துரையாடி, அனைவரும் விரைந்து குணமடைய வேண்டும் என வாழ்த்தினர்.