கோலாகலமாக நடந்த சித்திரை திருவிழா.. கும்மி பாட்டு பாடி பக்தர்கள் நேர்த்திக்கடன்
- சித்திரை திருவிழாவையொட்டி, பல்வேறு கோயில்களில் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
- திண்டுக்கல்ல அருகே நல்லாம்பட்டியில் நடைபெற்ற சித்திரை திருவிழாவில் அம்மன் கரகம் ஜோடித்து வீடு வீடாகச் சென்று சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அக்னி சட்டி ஆட்டம் ஆடினர்
- திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த காரம் கிராமத்தில் சித்திரை மாத கிருத்திகையையொட்டி, வள்ளி தெய்வானை சமேத சிவசுப்பிரமணிய ஆலயத்தில் பக்தர்கள் காவடி எடுத்தும், 101 பால்குடம் அபிஷேகம் செய்தும் வழிபட்டனர்
- 108 திவ்யதேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், சித்திரை மாதம் அமாவாசையை ஒட்டி திருவடி கோவில் புறப்பாடு வீதியுலா உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.
- நாகையில் உள்ள பாதாள காளியம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவில், கரகாட்டம் தப்பாட்டம், களைகட்ட, கோவிலில் இருந்து புறப்பட்ட முளைப்பாரி ஊர்வலத்தில் திரளான பெண் பக்தர்கள் கலந்துகொண்டு கும்மி பாட்டு பாடி காளியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.