சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்வதற்கு, தீட்சிதர்கள் பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சிதம்பரம் பழைய புவனகிரி சாலை பகுதியை சேர்ந்த ஜெயசீலா, நடராஜர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்போது, கனக சபை மீது ஏறி சாமி தரிசனம் செய்வதற்கு, தீட்சிதர்கள் 200 ரூபாய் வசூலித்ததாக கூறப்படுகிறது. இதனால், ஜெயசீலாவுக்கும், தீட்சிதர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஜெயசீலா, சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.