சென்னை துறைமுகத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

Update: 2024-09-21 08:42 GMT

சென்னை துறைமுகம்..

சுமார் நானூறு ஆண்டு கால வரலாற்றைக் கொண்டதும் , நாட்டிலேயே இரண்டாவது பெரிய துறைமுகம் ஆகும்

ஆண்டு தோறும் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான சரக்குகள் இங்கு கையாளப்படுகின்றன

சீனாவில் இருந்து சுமார் ரூ 35 கோடி ரூபாய் மதிப்புள்ள

எலக்ட்ரானிக் பொருட்களைச் சுமந்து வந்த கன்டெய்னர்

காணாமல் போன சம்பவம் தான் ஒட்டுமொத்த சென்னை துறைமுக அதிகாரிகளையும் அதிர்ச்சியடையச் செய்தது.

துறைமுகத்தில் உள்ள சரக்குகளை பாதுகாப்பாக அனுப்பும் கம்பெனி

சென்னை துறைமுகத்திற்கு வரும் சரக்குகளைப் பாதுகாப்பாகச் சம்மந்தப்பட்ட கம்பெனிக்கு அனுப்பி வைக்கும் வேலையை CITPL என்ற நிறுவனம் செய்து வருகிறது.

இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் பாதுகாப்பிலிருந்த பெங்களூரைச் சேர்ந்த கம்பெனிக்கு செல்ல வேண்டிய ரூ 35 கோடி மதிப்புள்ள கன்டெய்னரை காணவில்லை என பெங்களூரைச் சேர்ந்த கம்பெனி கூறியதால் அதிர்ச்சியடைந்த CITPL அதிகாரிகள் போலீசில் புகார் அளித்தனர்.

ரூ 35 கோடி மதிப்புள்ள சீன கன்டெய்னர் கடத்தல்

இதனைத் தொடர்ந்து கன்டெய்னர் ட்ராக்கிங் ரிப்போர்ட்டை ஆய்வு செய்த போது சம்மந்தப்பட்ட கன்டெய்னர் வேறு ஒரு டிரைலர் லாரியில் கடத்தி திருவள்ளுருக்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்துள்ளது.

இதற்கு மாஸ்டர் மைண்டாக செயல்பட்டவர் சம்மந்தப்பட்ட CITPL ஊழியர் இளவரசன் என்பதும், அவர்தான் சம்மந்தப்பட்ட கன்டெய்னரை ஸ்கேன் செய்து பார்த்த பின்னர் இந்த கடத்தலுக்கு ஸ்கெட்ச் போட்டு இருக்கிறார். மேலும் சில டிரைலர் லாரி டிரைவர்களை கூட்டு சேர்த்துக் கொண்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக டிரைலர் லாரி டிரைவர் மணிகண்டன் உட்பட 6 பேரைக் கைது செய்துள்ள நிலையில் இளவரசன் உட்படத் தலைமறைவான மூன்று பேரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

ஒரே கன்டெய்னர் ஓஹோன்னு செட்டில் ஆகனும்னு திட்டம் போட்ட கும்பலின் மாஸ்டர் கன்டெய்னர் கடத்தல் பிளான் துறைமுக அதிகாரிகளை அதிர்ச்சியடை வைத்திருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்