சென்னை'ஸ் அமிர்தா கல்வி நிறுவனத்தின் 8-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா.. OUM பல்கலைக்கழக தலைவர் பங்கேற்பு

Update: 2024-06-22 14:30 GMT

சென்னைஸ் அமிர்தா கல்வி நிறுவனம், மலேசியாவின் OUM பல்கலைக்கழகத்துடன் இணைந்து, ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பில் 10 ஆயிரம் மாணவர்களை பட்டதாரிகளாக உருவாக்கியுள்ளது. இந்நிலையில், சென்னைஸ் அமிர்தா கல்வி நிறுவனத்தின் 8-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில், மாணவர்களுக்கு சென்னைஸ் அமிர்தா குழும தலைவர் பூமிநாதன், மலேசியாவின் OUM பல்கலைக்கழக தலைவர் டாக்டர் அஹ்மத் இசானி அவாங் உள்ளிட்டோர் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர். சென்னைஸ் அமிர்தாவின் செங்கல்பட்டு, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு கிளைகளில் பட்டயப்படிப்பு பயின்ற 250 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. விழாவில் பேசிய சென்னைஸ் அமிர்தா குழுமத்தின் தலைவர் பூமிநாதன், மாணவர்களுக்கு சர்வதேச கலாச்சாரம் குறித்து அறிந்துகொள்ளும் வகையில், சென்னைஸ் அமிர்தா கல்லூரி மாணவர்கள் மலேசியாவில் படிக்க உள்ளதாகவும், மலேசியவின் OUM பல்கலைக்கழக பேராசிரியர்கள் சென்னைஸ் அமிர்தா கல்லூரியில் பணியாற்ற உள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்