கோர்ட் வாசலில் கேங்க்ஸ்டர் அவதாரம் சென்னையே அலற இரட்டை கொலை -ஆம்ஸ்ட்ராங்கை நடுங்க விட்ட அந்த சம்பவம்

Update: 2024-09-24 05:32 GMT

கோர்ட் வாசலில் கேங்க்ஸ்டர் அவதாரம் சென்னையே அலற இரட்டை கொலை -ஆம்ஸ்ட்ராங்கை நடுங்க விட்ட அந்த சம்பவம்

பள்ளி வாழ்க்கையில் இருந்து தடம் மாறி பின்னாளில் சென்னையின் கேங்க்ஸ்டராக இருந்த பிரபல ரவுடி சீசிங் ராஜா குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு..

பல கோடியில் வாங்கப்படும் பிளாட்டோ அல்லது புதிதாகக் கட்டப்படும் கட்டிடமோ அவற்றின் வேலை தொடங்கப்படும் நேரத்தில் அவற்றின் ஒட்டு மொத்த ஆவண ஜாதகமும் அவர் கையில் இருக்கும் ....அந்த அளவுக்குத் தென் சென்னையில் ஆதிக்கம் செலுத்தி வந்தவர் சீஸிங் ராஜா...

பள்ளிப் படிப்பின் போதே சீஸிங் ராஜாவின் கவனம் திசை திரும்ப

படிப்பு பாதியில் நின்று போனது.. சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் தென் சென்னையில் கோலோச்சிய ரவுடி சிவா நாயக்கரின்

சீடராக இருந்து பின்னாளில் சென்னையின் கேங்க்ஸ்டர் என

மாறிப்போனார்

டார்கெட்களை பிக்ஸ் செய்து விட்டால் அவர்களைக் கடத்தி காரிலே சுத்தி மரண பயத்தைக் காட்டுவதுதான் சீஸிங் ராஜாவின் ஸ்டைல் என்கின்றனர் போலீசார். கட்டப்பஞ்சாயத்து, ரியல் எஸ்டேட் எனப் பலரையும் மிரட்ட ஆரம்பித்தார் சீஸிங் ராஜா..

சிறு சிறு குற்றங்களில் ஈடுபட்ட ராஜா பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷுடன் கைகோர்க்க வட சென்னையிலும் கால் பதிக்க ஆரம்பித்தார். இதன் விளைவாக

ஆற்காடு சுரேஷின் பரம எதிரியான ரவுடி சின்னா மற்றும் அவரது வழக்கறிஞர் பகத்சிங் ஆகிய இருவரையும் கடந்த 2010 ம் ஆண்டு பூந்தமல்லி நீதிமன்றத்தில் வைத்து வெட்டி கொலை செய்ததன் மூலம் சென்னையில் முக்கிய கேங்க்ஸ்டராக அறியப்பட்டார்..

இதன் பின் சீஸிங் ராஜாவின் வளர்ச்சி வேகமடைய தொடங்கியது.. பின்னர் ஆம்ஸ்ட்ராங்கின் வலது கரமாக செயல்பட்டு வந்த தென்னரசை 2015ம் ஆண்டு வெட்டி கொலை செய்தார்.

சீஸிங் ராஜா மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பின்னர் பல ரவுடிகளை தேடி வந்த நிலையில், ஆந்திராவில் பதுங்கி இருந்த சீஸிங் ராஜாவைக் கைது செய்த போலீசார் அவரது ஆயுதங்களை மீட்பதற்காக நீலாங்கரைக்கு கூட்டிச் சென்ற போது போலீசாரை நோக்கி சுட முயன்ற சீஸிங் ராஜாவை போலீசார் சுட்டு கொன்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்