தீப்பொறியுடன் கேட்ட பலத்த சத்தம்..-மெட்ரோ ரயிலில் இருந்து அலறி ஓடிய பயணிகள்.. -சென்னையில் பரபரப்பு

Update: 2024-07-11 03:27 GMT

சென்னையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சுரங்க பாதையில் மெட்ரோ ரயில் நிறுத்தப்பட்டதால், 300-க்கும் மேற்பட்டோர் சுமார் 20 நிமிடம் சிக்கித் தவித்தனர்.

சென்னை விம்கோ நகரில் இருந்து விமான நிலையம் நோக்கி புறப்பட்ட மெட்ரோ ரயில், உயர்நீதிமன்றம் ரயில் நிலையத்தை கடந்த பிறகு, சுரங்க பாதையில் சென்று கொண்டிருந்தபோது, ரயிலுக்கு வெளியே தீப்பொறியுடன் பலத்த சத்தம் கேட்டது. உடனடியாக அங்கேயே ரயில் நிறுத்தப்பட்டு, மின் விளக்குகள் அணைந்து, குளிர்சாதன வசதியும் தடைபட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள், பீதியடைந்து ரயிலுக்கு உள்ளிருந்து கூச்சலிட்டனர். சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு ரயில் மெல்ல இயக்கப்பட்டு, சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தை வந்தடைந்தது. உடனடியாக வெளியேறிய பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மெட்ரோ ரயில் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அந்த ரயிலில் மூன்று முறைக்கு மேல் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. போர்க்கால அடிப்படையில் தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு வருவதாக மெட்ரோ ரயில் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு, அரை மணி நேரத்தில் பாதை சீரமைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்