பைனல் செய்யப்பட்ட டீல்.. சென்னையில் இந்தியாவின் புகழ்பெற்ற நிறுவனம்

Update: 2024-09-10 03:58 GMT

சென்னை ஒரகடத்தில் ஹெச்.பி. நிறுவனத்தின் கணினி, லேப்டாப் தயாரிப்பு ஆலை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்தியாவின் புகழ்பெற்ற HP-India மற்றும் Padget Electronics நிறுவனத்திற்கும் இடையே மத்திய அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. Dixon Technologies நிறுவனத்தின் துணை நிறுவனமான Padget Electronics நிறுவனம், ஹெச்.பி. நிறுவனத்தின் கணினி, லேப்டாப் போன்றவற்றை தயாரிக்க உள்ளது. சென்னை ஒரகடத்தில் 3 லட்சம் சதுர அடி பரப்பளவில் இதற்கான உற்பத்தி ஆலை அமைய உள்ளது. அடுத்தாண்டு ஜனவரி மாதம் உற்பத்தி தொடங்கவுள்ள நிலையில், சுமார் ஆயிரத்து 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்