சென்னை ஐகோர்ட்க்கு மும்பை நீதிபதி - மத்திய அரசு எடுக்கும் முடிவு என்ன?
சென்னை உள்பட 7 உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகளை நியமிக்க மத்திய அரசுக்கு கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட் தலைமையிலான கொலிஜியம் இந்த பரிந்துரையை அளிதுதள்ளது. அதில், மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமை, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், டெல்லி உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மன்மோகனை அதே நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், இமாச்சலப் பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எஸ்.ராமசந்திர ராவை ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ராஜீவ் ஷக்தரை, இமாச்சல பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ் கெய்தை, ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
பஞ்சாப் - ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதி குர்மீத் சிங் சந்தவாலியாவை மத்திய பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி நிதின் ஜம்தாரை கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற நீதிபதி தஷி ரப்ஸ்தானை மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கவும் கோலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.