மொத்த ஹைப்பையும் தூக்கி மாநாடு.. Entrance முகப்பில் வைத்த விஜய்.. அவர் தோன்றும் மேடை தான் சர்ப்ரைஸ்

Update: 2024-10-23 05:14 GMT

மொத்த ஹைப்பையும் தூக்கி மாநாடு.. Entrance முகப்பில் வைத்த விஜய்.. அவர் தோன்றும் மேடை தான் சர்ப்ரைஸ்.. புயலே வந்தாலும் பிளான் B தயார்

நடிகர் விஜய்யின் தவெக மாநாட்டிற்கான முன்னேற்பாடுகளால்... விழுப்புரம், விக்கிரவாண்டி பகுதியே பரபரத்து போயிருக்கும் நிலையில், இது குறித்தான ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம் விரிவாக..

தன் அரசியல் பிரவேசத்தின் முக்கிய அத்தியாயத்தை நெருங்கியிருக்கிறார் நடிகர் விஜய்...

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்னும் சில நாள்களில் நடைபெற இருக்கும் நிலையில், மாநாட்டுக்கான முன்னேற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...

விழுப்புரம், விக்கிரவாண்டியின் வி. சாலையில்... சுமார் 85 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலப்பரப்பில் மாநாடு நடைபெற இருக்கிறது...

170 அடி நீளம், 60 அடி அகலத்தில் தயார் செய்யப்பட்டிருக்கும் மேடையில்.. அரசியல்வாதியாய், ஒரு கட்சியின் தலைவனாய் முதல் முறையாக விஜய் தோன்ற இருக்கும் நிலையில், அவருடன் மேடையில் ஏறப்போகும் பெயர் பட்டியல் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது...

கட்சி நிர்வாகிகளும், பார்வையாளர்களும் அமரும் இடத்தில் சுமார் 15 ஆயிரம் ஹைமாஸ் விளக்குகள் அமைக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள்...

மாநாட்டு திடலின் இருபுறமும் 300க்கும் மேற்பட்ட தடுப்புகளை அமைத்து மொபைல் கழிப்பறைகள் ஏற்படுத்தி வருகிறார்களாம்..

இதோடு, மாநாட்டின் முகப்பு செயின்ட் ஜார்ஜ் கோட்டை போல அமைக்கப்பட்டு வருவது, தவெக நிர்வாகிகளையும், தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது...

75 ஆயிரம் வரை இருக்கைகள் போடப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், மாநாட்டு வளாகத்தை சுற்றிலும் சுமார் 20 ஆயிரம் மின் விளக்கு வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக சொல்கின்றனர்...

மாநாட்டின் போது எதிர்பாராத விதமாக மழை பெய்தால், பாதிப்பு ஏற்படாத வகையில், மணல் பரப்பில் ஜல்லி கற்கள் குவியல் குவியலாக கொட்டப்பட்டு நிலப்பரப்பை உயர்த்தியிருக்கின்றனர்...

மாநாட்டு திடலின் உள்ளே மின்வசதிக்காக, வயர்களை கேபிளாக பூமிக்குள் புதைத்து கொண்டு செல்ல மின்வாரியம் அனுமதி அளிக்காத நிலையில், ஜெனரேட்டர் மூலம் மின்சப்ளைக்கான ஏற்பாடுகள் தயார் செய்துள்ளார்களாம்...

முக்கியமாக, பாதுகாப்பு கருதி மாநாட்டு திடலின் அருகில் உள்ள கிணறுகளை மரப்பலகைகள் அமைத்து மூடப்பட்டிருக்கின்றது.

மாநாடுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விக்கிரவாண்டி, வி.சாலையை.. வெற்றி சாலையாக மாற்றுவோம் என சூளுரைத்ததை மெய்ப்பித்து காட்டுவாரா விஜய்.. பார்க்கலாம் பொறுத்திருந்து...

Tags:    

மேலும் செய்திகள்