திடீரென நின்ற குழந்தையின் மூச்சு..நம்ப மறுத்து தூக்கி ஓடி கதறிய தாய் - மனதை நோகடிக்கும் துயர காட்சி
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் தனது மூன்று வயது குழந்தை உயிரிழந்ததை ஏற்றுக்கொள்ள முடியாத பெற்றோர், குழந்தையின் உடலை எடுத்துக்கொண்டு தனியார் மருத்துவமனைக்கு விரைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையின் உடலை பெற்றோர் எடுத்து சென்றனர். அங்கேயும் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவிக்கவே, தாயார் கதறி அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.