சென்னையில் உள்ள எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையத்திற்கு "ஈட் ரைட் ஸ்டேஷன்" தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது... சுகாதார மற்றும் ஆரோக்கிய வழிமுறைகளை கண்டிப்புடன் கடைபிடிக்கும் நாட்டில் உள்ள 150 ரயில் நிலையங்களுக்கு "Eat Right Station" தரச் சான்றிதழை மத்திய உணவு மற்றும் தர நிர்ணய ஆணையமான FSSAI வழங்கியுள்ளது. அவற்றில் ஒன்றாக சென்னையில் உள்ள எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையத்திற்கும் இந்த தர சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.