பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்து... மனைவி கண்முன்னே உயிரை விட்ட கணவன் -சென்னையில் பெரும் சோகம்

Update: 2024-06-07 09:10 GMT

பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்து... மனைவி கண்முன்னே உயிரை விட்ட கணவன் - சென்னையில் பெரும் சோகம்

மனைவியின் பிறந்த நாளை முன்னிட்டு வீட்டை சீரியல் பல்புகளால் அலங்கரித்த கணவர், மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மேற்கு மாம்பலம் பிருந்தவனம் தெருவை சேர்ந்தவர் அகஸ்டின் பால். சொந்தமாக பார்சல் சர்வீஸ் நடத்தி வந்த இவருக்கு, கடந்த 8 மாதங்களுக்கு முன் கீர்த்தி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், மனைவியின் 25 ஆவது பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில், வீட்டை மின் விளக்குகளால் அலங்கரித்த அகஸ்டின் பால், வீட்டிற்குள் சீரியல் பல்புகளை பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட அகஸ்டின் பால் மனைவி கண்முன்னே உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அகஸ்டின் பாலின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவரின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்