டிவி ஆங்கரிடம் அர்ச்சகர் செய்த செயல்..? - வெளியான அதிரடி உத்தரவு

Update: 2024-05-29 06:50 GMT

தனியார் டிவி தொகுப்பாளினி அளித்த பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட காளிகாம்பாள் கோயில் அர்ச்சகருக்கு, 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த பெண் தொகுப்பாளினி ஒருவர், சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோயில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி மீது பாலியல் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக 6 பிரிவுகளின் கீழ் விருகம்பாக்கம் மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதையடுத்து, அர்ச்சகர் கார்த்திக் முனுசாமியை கைது செய்த காவல்துறையினர், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற குடியிருப்பு வளாகத்தில், 17 வது மேஜிஸ்ட்ரேட் அனிதா ஆனந்த் முன்பு ஆஜர் படுத்தினர். அப்போது, அர்ச்சகர் கார்த்திக் முனுசாமியை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, கார்த்திக் முனுசாமியை புழல் சிறைக்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்