சென்னையில் இரவில் மூடப்படும் முக்கிய மேம்பாலங்கள் - அதிர்ச்சி காரணம்.. தெரிஞ்சிக்கோங்க மக்களே

Update: 2024-08-09 16:50 GMT

சென்னை மேம்பாலங்களில் இரவு நேர வாகன போக்குவரத்துக்கு போலீசார் கட்டுப்பாடு விதித்துள்ளனர். எதற்காக இந்த கட்டுப்பாடு? விரிவாக பார்க்கலாம்..

ஜெமினி மேம்பாலம் தொடங்கி நேப்பியர் பாலம், கத்திப்பாரா மேம்பாலம் என முக்கிய மேம்பாலங்களில் இரவு நேரத்தில் வாகன போக்குவரத்தை போலீசார் தடை செய்துள்ளனர்

விபத்துக்கள் மற்றும் குற்றச்செயல்களை தடுக்கவே மேம்பாலங்கள் மூடப்படுவதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, இரவு நேரங்களில் காரை நிறுத்திவிட்டு சிலர் மேம்பாலங்களில் தூங்குவது விபத்துக்கு காரணமாக இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதுஒருபக்கம் என்றால் இளைஞர்கள் ரேஸில் ஈடுபடுவதை தடுக்கவும் இந்த நடைமுறையை போலீசார் பின்பற்றுகின்றனர்.

அண்மையில் த*கொ*லை சம்பவங்கள் அரங்கேறிய நிலையில், அதனை தடுப்பதிலும் சவால் நீடிப்பதால், அதுவும் மேம்பாலங்களை மூடுவதற்கு காரணமாக உள்ளது.

ஒட்டுமொத்தத்தில் இரவு 11 மணிக்கு மூடப்படும் மேம்பாலங்கள் அதிகாலை 4 மணிக்கு பிறகு திறக்கப்படுகின்றன.

இது தற்காலிக நடைமுறையா? அல்லது நீண்ட நாட்கள் தொடருமா என்பது விரைவில் தெரியவரும்...

Tags:    

மேலும் செய்திகள்